பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை . இளஞ்சேரன்

அறிவுடையம் யாம்'என்றே அகந்தை கொள்ளின் அறியாமை அஃதே'என் றறையும் முப்பால்; செறிவுடையார் இஃதுணர்ந்து செருக்கு நீக்கில் செழித்துவரும் வெற்றியதன் படின் றாகும்: அறியாமை தனையறிதல், அடுத்த வர்தம் அறிவறிதல், செருக்ககற்றல் எனுமிம் மூன்றும் அறியாமை அகற்றிவெற்றி பெறுவ தற்கே

அரும்படைகள்; அவை மனிதற் கமைதல் நன்றாம்.

- 322

அறிவிருந்தும் திறமிருந்தும் அவற்றின் பாங்கால் அடைவாழ்வை அடையாமல் அவலங் கொள்ளப் பொருளியலால், பிறப்பதனின் உயர்வு தாழ்வால் பொதித்தழுத்திப் பொக்கையராய்ப் 4ಆಹಹ லாக்கி மருளவைத்தார் செல்வத்தார், மதத்தின் பாலார்; மற்றிவற்றை அறிவிருந்தும் அறிதற் கேற்ற

தெருளமைந்த சூழல்இல்லா நிலையால் பல்லோர்

தேக்கமெனும் அறியாமைத் திசையில் உள்ளார்.

. 323

|64