பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

மங்கல நாண்வழி மீனம்புகுந் தாங்கே தங்கின. பொறையன் தமிழா சிரியன்

ஒருவனுக் கென்றே ஒதுக்கிய ஒப்பனை

- புரிந்திடா தொத்தாள் புனையா ஒவியம்.

அஞ்சல் ஊழியர் அவட்கொரு முடங்கல் (15) கொஞ்சுதற் கென்றே கொடுத்தார்; அந்தக் கற்சிலை நெகிழ்ந்து கணிச்சிலை யானது. சொற்கலைக் கடங்காச் சுடர்பெற் றதுவே.

முடங்கிக் கிடந்தஅம் முனையிலாக் கம்பி முடங்கல்மின் ற்ைறலால் மூரி நிமிர்ந்தது. (20) ஓடினாள் அறையில் உணர்வாம் முடங்கலைக் கூடிய பொறையனாய்க் கூட்டியே அனைத்தாள் ஒட்டிய இடத்தில் ஒருநூறு முத்தம் இட்டே பிரித்தாள்; இவளோ கிழிப்பாள்?

எழுத்தொவ் வொன்றும் பழுத்த சுளையாய் (25) அள்ளி விழுங்கும் ஆயிழை

தெள்ளிய ஓசையாம் துள்ளலிற் படிப்பளே. (27)

(நேரிசை ஆசிரியப்பா) 348

|76