பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

முத்தும் பவளமும் முந்திரி நீலமும் வைத்துப் பதித்த வளர்நிலா ஊர்ந்திடும் புத்துர் மனையிலும், பூத்தான் உளத்தும் முத்திரை யாய்வாழ் முகிழ்நகைப் பொன்னி நத்திய பிரிவால் நலிந்து சாம்பிடும்

அத்தான் பொறையன் அலறுவ கேளாய்:

துளித்துமலைப் பிறவாதென்

துணைக்குவந்த பொன்னியன்பே பழித்தல்இலாத் தமிழ் பயின்றேன்;

பாவாய்!உன் பக்கலின்றிக் கலித்தொகையுங் கசந்ததடி,

குறுந்தொகையுங் குமட்டியதே; குளித்துள்ளேன் ஏக்கத்தில்;

குளிர்காய வருகின்றேன்.

உருக்கியெடுத் தொளிராதென்

உயிர்க்கொளிரும் பொன்னியன்பே! உருக்கமைந்த உடல்பெற்றேன்;

உயிரே உன் துணையின்றிப்

177