பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

30வளிவழங்கு மல்லன்மா ஞாலம்” என்றே வள்ளுவனார் ஒரு குறிப்பை வழங்கி வைத்தே துளியளவாய் அறிவியலைத் தொடங்கி வைத்தார்; தொடர்ந்ததனை நாம்தொட்டு வளர்த்தோ மல்லோம்; வளிவழங்கு மண்டிலத்தை, வானத் தாய்வை வகையாக மேனாட்டார் வகுத்துக் கண்டார். வழியறியோம் வள்ளுவனை உலகிற் கீந்தே வானம்செல் வான் புகழும் அவர்க்கே ஈந்தோம். 359

"வான் நிழல்'என் றசரீரி வடமொ ழிக்கே வழங்கியசேக் கிழார்வழியில் வளர்ந்தோ மோநாம்? கால்நிழலாய்க் கதைகளையே கதைத்து வந்தோம் காப்பியத்தில் இலக்கியத்திற் காணும் நல்ல மேனிலைகொள் சொற்களெலாம் தொகுத்த மைத்து மிகப்பாங்காய்க் கவிதையுரு வாக்கி நூலாய்க் காணுகின்ற பொங்கல்எனுங் கலைச்சொற் பொங்கல் கலங்கலமாய்ப் பொங்கிடுவோம், க்விதைப் பாங்கில்.

360

of 84