பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

உரைவளங்கள் நயநூல்கள் சிலவாய்ச் செய்தே, உடலூட்டக் குறிநூல்கள் பலவாய்ச் செய்து, குறைவழங்கும் பகைநூல்கள் குறையச் செய்து, குணம் வளர்க்கும் நகைநூல்கள் நிறையச் செய்து,

முறைவழங்கும் அரசியல்நூல் முழுமை செய்து, முழுக்கதை நூல் சிறுகதைநூல் அளவாய்ச் செய்தே கறையில்லா மெய்ந்நூல்கள் கனிவாய்ச் செய்தே கவின் இசையும் கூத்தும்நன் கியங்கச் செய்வோம்:

36 |

நிலத்தேர்வும் மண்ணாய்வும் நீரின் தேர்வும் நிகழ்த்துகின்ற பழஞ்செய்யுள் நிலைப்பாய்க் கூட்டி, உளத்தேர்வும் உடைத்தேர்வும் உரைக்கும் நல்ல

உவப்பாக்கும் தேர்வெல்லாம் ஒன்றாய்க் காட்டி வளத்தேராய் நூல்கள் பல வனப்பாய்ச் சேர்த்து வளர்பொங்கற் பானையுடன் வைத்துப் போற்றி

உளப்பொங்கல் பொங்கிட்டால் உண்மை யாக உயர்ந்தோங்கும் தமிழ்க்கீடும் உலகில் உண்டோ? 362

(எண்சீர்

ஆசிரிய விருத்தங்கள்)

185