பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

இலக்கணத் தின்வை ரக்கல்; வளரும் இலக்கியத் திற்கோர் உரைகல். - முழக்கும்

எழுத்ததி காரம் நற் சொல்லதி காரம் (35) வழுத்தும் பொருளதி க்ாரம் - பழுத்திட்ட முக்கனியாம் பாங்கில் முறையாய்ப் படைத்திட்ட அக்கனியில் மிக்கசுவை எக்கனியோ? - மைக்கணியே சொல் என்றான். கண்ணம்மா சொல்லும் மொழியதில்!

வெல்லமொழி நன்னயமாய் வைத்திட்டே - சொல்ல

- லுற்றாள் (40) சமுக்கனி என்றிட்டாய் முற்றிலும் உண்மையே; பொய்க்கனி ஒன்றைப் புகன்றிட்டாய்; - ஒக்கக்கேள்!

தொல்காப் பியனேதான் தோற்றிய தொன்னுரலாம் தொல்காப் பியமதில் தோலாது - பல்கும் எழுத்ததி காரமென் றில்லவே யில்லை (45) அழுத்தமாய்ச் சொல்வேன் அன்பா! - எழுத்தைத் தொகுத்தும் விரித்தும் தொடர்ந்தும் கனிபோல் வகுத்த இனிமையைக் கொண்டு - பகுத்தால்

எழுத்து அதி காரமாய் இல்லையே என்றாள். (எழுத்ததி காரமாய்)

  • மைக்கணியே மையூசிய கண்ணை உடையவளே.

190