பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

வசையில் மொழிதழ் அறிஞன். - இசையும்

விளிமரபு தன்னால் விளித்தே உறவின் வழிமரபு கொள்ளும் வளத்தன், - விழியாம் களவியல், கற்பியலால் பாலியல் ஆய்ந்தோன்; அளவின் புறத்திணை யாற்போர்த்-தலைவனாம்; (90) மெய்ப்பாட்டியலால் உளவியல் வல்லுநன்; செய்யு ளியலால் ஒலியியல் - ஐயன்; மரபியல் தன்னால் உலக வழக்கின் உாம்அறி சான்றோன்; எனவே - விரவிடும் பல்கலைச் சான்றோனாய்ப் பார்த்தும் இலக்கணச் (95) செல்வன் என மட்டும் செப்புவதோ? - சொல்'என, புதிர்களை வைத்தே புகழ்க்காப் பியற்கே எதிர்மறை வாயிலாய் ஏற்றம் - கதிர்போல் உரைத்தாய் மகிழ்ந்தேன்; உணர்ச்சியால் உந்தும் வரைத்தாழ் அருவிபோல் வாய்ந்தே - நிறைத்திடும் (100)

ஒல்கா உணர்வோ டுலகெலாம் செய்குவம்

தொல்காப் பியத்திற்குத் தொண்டு. (102)

368 (கலிவெண்பாட்டு]

193