பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

வடந்தைத்தண் வளியாம் வாடை, இவையன்றோ நெடுநல் வாடை!

இடையெண்

அரும்பவிழ் பொழுதநறிவார், இரும்புவிளக் கேற்றுவார்: நெல்மலரைத் தூவுவார்; அகிற்புகையைப் பாவுவார்; கதவந்தாழ் பூட்டுவார்; கணிவிசையைக் கூட்டுவார்; பிரிவதனால் ஏங்குவார்; பின் அவரோ தூங்குவார் அரண்மனையில் அரசியாள்; அரசன்வரப் பரசுவாள்; வேம்புதலைப் பாண்டியன்; கூம்பிரவில் ஈண்டியே விழுப்புண்கொள் வீரரைக் களிப்பாக்கச் சாருவான். இவையாவும் படைத்தனை, சுவையாவும் நடத்தினை.

- சிற்றெண்

(இவை சரடி இரண்டு, அளவடி நான்கு, சிந்தடி எட்டு, குறளடி பதினாறு கொண்ட நீர்த்திரை.

| 97