உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

இல்லாத நற்பொருள் பிறமொழி

இயம்பிடில் தமிழினில் ஆக்குவீர்! நல்லதோர் சொல்லினை உணர்த்திடும்

நலமெனில் மொழிபெயர்த் திடுக,நீர் செல்லாத நூல்கள் எவற்றையும்

செல்லாத காசென ஒதுக்குவீர்! இல்லாத தமிழரிங் கில்லென

இயற்றுவீர் தமிழக நிலத்திலே! 372

தொல்லறிவாளர்கள் ஆக்கிட்ட

தொன்னூல் நற்பொருள் வாய்ந்ததை நல்லுரை எளிதென ஆக்குவீர்!

நலிவைப் பெருக்கிடும் பொருளெனில் கல்லறை கட்டுவீர் ஒலியிடுங்

கடலுடை உலகினில் தமிழகம் வல்லர சாக்கிடும் வலியினை

வாய்த்துளிர், செயலினால் ஆற்றுவீர்!

373

200