பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

நையாத தமிழினுக்கு

. நலிவைமுன் அவர்செய்ய,

ஐயா,பல் கலைக்கழக

ஆராய்ச்சி செய்திட்டோர்

"மெய்யாக வடமொழியே

முதலாகும் எனக்கூறி

வையாமல் புரிந்திட்டார்

வாள்வீச்சு தமிழினுக்கே.

380 களஞ்சியத்தில் அந்துமுதல்

கறையானும், வண்டுகளும் வளம்பெற்று நெல்லழிக்கும்

வகையேயாய்த் தமிழமுதைக் குழம்பாக்கி வாழ்வதொடு

குலைக்கின்றார் தமிழகத்தை; உளம்பதைக்கும் இச்செயலை

உடைத்தெறிந்து தமிழ்காப்பீர்!

38. (தரவு கொச்சகக் கலிப்பாக்கள்)

204