பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லுக்கொரு நடையுண்டு: சொல்லின்வேர் அதன் காலாம்; சொல்வரலா றதன் இயக்கும்; நெல்மணிபோல் பொருட்செறிவு நடைப்பெருமை. இவையுணர்ந்தே இடம்காலம் அறிந்துசொலும் நடையஃதே நற்பயன்சேர் கொடையாகும்; குறள்சொல்லும்:

"இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக,

நடைதெரிந்த நன்மை யவர்" - . (குறள்: 712)

205