பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் கவிதைகள்

கவிதை சுரப்பது ஏன்? கவிஞர்கோ கோவை. இளஞ்சேரன்"

SSAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS

உள்ளம் சுரப்பது கவிதை, உணர்வு வடிப்பது கவிதை. சுரப்புக்கு ஊற்றுக்கண் மன ஊறல் - அதன் வழி எழும் மன எழுச்சி. - -

இயற்கையின் படைப்புகள் உள்ளத்தைக் குளிர்விக் கின்றன; வாழ்வியல் தழுவல்களால் உள்ளம் சிலிர்க்கிறது; உலகியல் நடப்புகள் உள்ளத்தைக் கெல்லுகின்றன. இவற் றால் எழும் உணர்வைக் கவிஞனால் தேக்கிக் கொள்ள முடியாது. ஆனால், அவ்வுணர்வு தன் போக்கில் கொப் புளிக்கக்கூடாது. எழும் உணர்வை அறிவு தழுவ வேண் டும். அறிவு தழுவாது வெளிப்படும் உணர்வு தலைக் கயிறு இல்லாத தனி மாடு. அறிவு தழுவிய அவ்வெளிப் பாடு ஒசைக்கட்டுடன் இண்ைந்து கவிதையாகச் சுரக் கிறது. இது திட்ட மிட்ட முயற்சியின் விளைச்சல் அன்று.

"இவை முயன்று எழுதப்பட்டனவல்ல. மூச்சுப் போலப் பிறந்து வார்த்தைகளாக - வரிகளாக வெளிப்பட்டவை'

என்று கவிஞர் வா. செ. குழந்தைசாமி அவர்கள் இந்நூல் அணிந்துரையில் குறித்திருப்பது உணர்ந்து எழுதிய உண்மை. , । -

"துணை இயக்குநர், பதிப்புத் துறை, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்

[22]