பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

ஒலியொடு திறந்த உதட்டை மூடி ஒலித்துத் திறக்கின் அம்ம’ எனும்உரை நீட்டித் தம்மா' வாகி, அஃதே காட்டிய துள்ளக் குழந்தைதன் உணர்வை. வழியும் உணர்வின் ஒலியே மொழியாம்; மொழியே மாந்தனின் முதல்அடை யாளம்.

அவ்வடை யாள முதற்சொல் 'அம்ம'வாம். செவ்விய 'அம்ம செந்தமிழ்ச் சொல்லே. மாந்தனின் முதற்சொல் செந்தமிழ் என்னில் போந்தது தொன்மைக் கொருவரை யறையே. மாந்தனின் முதன்மொழி தேன்றமிழ் மொழியே.

382

(நிலைமண்டில ஆசிரியப்பா)

208