பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

இவ்வகையில் பிற்ந்த்ன்வே இந்நூலாத உருவாகியுள் ளன. என் வாழ்வின் நிகழ்ச்சிகளே கவிதைப் பிறப்பிற்கு; வேர் என்பதை இந்நூல் இணைப்பு 1 இடம் சுட்டல்' சொல்லும். எழுதப்படாமல் கவியரங்குகளில் பொழியப் பட்ட கவித்ைதள் பின்னர் ஒலிப்பதிவிலிருந்தோ, நினைவுப்பதிவிலிருந்தோ எழுத்துருப்பெற்றவையும் இடம் பெற்றுள்ளன.

மலர்களுக்கு வேண்டியோர்க்காக - உருவானவையும் கருத்திற்குத் தொகுப்பிட்டுக் கவிதைகளாகக் கனிந்தவை கள். அவை சில உள. -

'கோவை இளஞ்சேரன் கவிதைகள்' முதற்பதிப்பு 1963 -ஆம் ஆண்டில் வெளிவந்தது. ஆர்வ வரவேற்புடன் ஆறு திங்கட்குள் பரவிற்று. பின்னர்ப் பிறந்தவை இணைந்த பதிப்பாக இது பிணைப்புப் பதிப்பாகிறது. -

நூலமைப்பும் பாடலமைப்பும் யாப்புக் குறிப்பும் முகமை, இண்ைப்புகளும் கூடிய இத்தொகுப்பு, கவிதைப் பரப்பில் இஃதொரு புதுமைப் பதிவு என்பதைக் கணிர்க் குரலில் பேசும். அனைவகை யாப்பிலும் கவிதைகளைச் சுவைக்கலாம். சில வகை ஒசைப் பாக்களையும் பாடிப் படிக்கலாம். ஒரு நெடிலடி ஆசிரிய விருத்தம் (பாடல் 454) ஒரு புத்தமைப்பு. -

திருக்குறளை அடியொற்றிய தலைப்புகள், 81 பொருள்களின் தொடர்கள், அவற்றில் பொதிந்துள்ள கருத்துக்கள் என் உள்ளத்தின் மறுபதிவுகள்.

'தன் நெஞ்சு அறிவது' என்னும் தலைப்பிலுள்ள 60 பாடல்கள் என் வாழ்வுப் பட்டறிவின் படப்பிடிப்பு;

1231