பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

நம்பி;

செல்வி ஈன்று செல்வம் ஈந்தாய்; மெல்லத் தாழ்ந்த செல்வி குரலோ, நல்ல தாழிசை" தான்.

395 - (வெண்டாழிசை1 நங்கை:

"அத்தான்' எனுந்திரு அன்பொலி,

செல்வி இவள் பிறந்தே "அத்தன்' என ஆக் கினளே;

இவள்தனை 'அக்கை'என்றே முத்தெனுஞ் செல்வன் மொழியப்

பிறந்தனன்; நங்குடிக்கோ முத்திரை வைக்கும் துறைகள்

முகிழ்க்கும்; துறை"ப் பிறப்பே. 396

(கட்டளைக் கலித்துறை) நம்பி:

பெண்னொன்றும் ஆணொன்றும் பெற்றுக் கொண்டோம் பின்னொன்று வேண்டாம்நாம் பேணிக் கொள்வோம் ; கண்ணொன்றும் இவ்விருவர் தன்ற னக்காய்க் கணக்காகத் துணைதேடிக் களித்து, மேலும்

அத்தன் தந்தை

22 |