பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

நங்கை:

குறையறு முறையது வரையறை உறைவது;

கறைபெறும் முறையது சிறுசெயலே, துறைதொறும் தமிழது புரையறு மொழியென

வரைதுறை தரு நிறை தமிழரதே.

409 (முடுகு வண்ண ஈரடித் தாழிசை) நம்பி;

சோறு சமைப்பதற்கும்,

சுவைக்குழம்பு கொதிப்பதற்கும், சாறு இறக்குதற்கும்,

சார்கறிகள் கூட்டுதற்கும்

வேறுவே றளவுண்டு;

வேவதற்கும் வரம்புண்டாம்;

ஏறுமாறு சமையலெனில்,

தாறுமாறு சாப்பாடாம்.

40 தாளிப்புக் கெண்ணெய்எனில்

மண்ணெண்ணெய் தாளிதமா? தாளிப்புக் கெண்ணெய்எனில்

தாழிஎண்ணெ யோவேண்டும்?

227