பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

உருவத்தில் தாயின்முகம் தகதகப்பு;

உண்மையான தந்தைமுகம் தளுதளுப்பு; - அவர்தான் பெரும்பொறுப்பு.

423 வளமுள்ள நடைக்குழந்தை துறுதுறுப்பு;

வளர்ந்துவரும் அவரிடையே குறுகுறுப்பு;

- வளமைக்கு முதற்குறிப்பு. வளமில்லா மனக்குழந்தை மசமசப்பு;

வளர்போக்கில் வளர்த்திடிலோ அதஅதப்பு

- வருந்தோல்வி அறிவிப்பு.

424 குமரிப்பெண் குளிர்காலக் கதகதப்பு;

கிணற்றுநீர் அக்கால வெதுவெதுப்பு; - அவற்றால் உடல்வனப்பு. குமரிப்பெண் கோடையிலே குளுகுளுப்பு;

கிணற்றுநீர் அக்கால நயநயப்பு; - அவற்றால் உளங்குளிர்ப்பு.

425

காதல்வெளிப் படும்பேச்சு கிசுகிசுப்பு; -

காதலர்கள் கூடிவிட்டால் கிளுகிளுப்பு:

- காதலுக்கே குதுகலிப்பு.

232