பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

காதல்மனம் இன்பநலக் குவிகுவிப்பு;

காதல்குறுக் கீடானால் தவிதவிப்பு;

- காதலர்தாம் உயிரிழப்பு. 426

தாய்மொழியை ஒதுக்குவதோர் கிறுகிறுப்பு; தாய்நாட்டைத் தேய்க்கின்ற கரகரப்பு:

- தாயின் கருவறுப்பு, தாய்த்தமிழில் பிறமொழியின் நசநசப்பு;

தங்கத்தில் இரும்பேற்றும் கசகசப்பு; - நாட்டில் களைவளர்ப்பு.

'மொழி இந்தி பொது'என்னும் மொடமொடப்பு, 427

மொத்தம்சில் லரையாக்கும் சடசடப்பு;

- தமிழ்மீது படையெடுப்பு. பழி இதனைப் போக்காத மதமதப்பு,

பகைமூட்டம் உண்டாக்கும் கொதிகொதிப்பு;

- பின்னர் போர் நடப்பு.

428

கார்கால முல்லை.மனம் கமகமப்பு;

கடுங்கூதிர் மலைத்தேனால் குதுகுதுப்பு: - பனிவெய்யில் நல்லழைப்பு:

233