பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

உவகைதனிற் கிளைக்குந் தூயவள்.

6s.

தனதத் தனதனன தனதத் தனதனன

தனதத் தனதனன தானனன் - தன தனதத் தனதனன தானனன் - தன தானதானன தானதானன தானதானன தானதான ன

தனதத் தனதனன தானனன் - தன தனதத் தனதனன தானனன்.

- சந்தக் குழிப்பு

உயிரிற் கலந்து நறும் உணர்விற் தெளிந்துலவி

உடலிற் படிந்தமைந்த தாயிவள் - உயர் உவகை தனிற்கிளைக் குந் தூயவள் - இள வேனிலோதெளி தேனிதோவெளி வானிலுரர் மதி

தானிதோவென உவமை யினிற்கனிந்து மேயவள் - எம துணர்வும் உளமுந்தவழ் யாயவள்; வெயிலிற் பிரிந்து நிலம் வினையுற் றியங்குமுனம்

வெளியிட் டியம்புசொலின் தொன்மையள் - நயம் விளையச் சுவை புகலும் மென்மையள் - இறைத் தூயதாமுதல் வாயதாமென மேயதாநயந்

தோய்வதாமென விழையத் தனித்தியங்கு தன்மையள் - பகை

விலகத் தகர்த்தெறியும் வன்மையள்;

244