பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

வீட்டினில் அடைந்துகிடந் திட்டால் உனை வீண்வம்புக்கு நானிழுக்க மாட்டேன்; தீட்டிவிட்ட தங்கவுடல் காட்டி - நீ

தெருக்கோடி வந்துவிட்டாய் கூட்டி! மீட்டிவிட்ட பேரியாழைப் போலே, - உன்

மேனிக்காற்றென் மேற்படிந்த தாலே, வாட்டிவதைக் கின்றதடி குட்டி - என் -

வாட்டங்கெடுப் பாய்கையாற் கட்டி!

469

கட்டவிழா மல்லிகை அரும்பே - உனைக்

கட்டவிழ்க்கும் வண்டெனை விரும்பாய்!

சொட்டைவிழாப் பொன்சிலையே பேடே - உனைச் சொக்கவைக்குந் தீயெனை நீ கூடாய்!

தொட்டுச்சுருங் காததளிர் உன்னை - விரல் தொட்டுப்பார்க்க ஆசைகொண்ட என்னைத் - - தொட்டணைக்க மேலும்னி நாணாய்! - அங்கு தோட்டக்காற்று போகுதடி வீணாய். 470

(அடிக்கிடையே கூன் அமைந்த அறுசீர் ஆசிரியச் சந்த விருத்தங்கள்]

257