பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



கோவை. இளஞ்சேரன்


ஏடெடுத்த நற்கவிஞன்
இப்படியோர் சீர்க்கவிதை
பாடியபின் அக்கவியில்
பாகதனை - ஓடவிட்ட


தன்கைக்கு முத்தமிட்டான்;
தன்முகத்தை ஆடிதனில்
புன்னகைக்கே ஆட்படுத்திப்
பூரித்தான் - 'என்னருமைச்
சொற்பாவாய்; கவிப்பேடே;
சொக்கவைக்கும் ஏருடையாய்;
நற்காதல் தீம்பொருளே’
என்றெல்லாஞ் - சொற்பெருக்கி


விம்முகின்ற உள்ளத்தில்
வெற்றிமகிழ் வேற்றுகையில்
மம்மரொடு தாழ்குரலில்
மண்டிநின்றே - அம்மம்ம!

*மம்மர்-துயரம்

258