பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
கோவை. இளஞ்சேரன்


பேச்சமைந்த சீர்க்கவியே
பாட்டமைத்த அன்னவனை
ஏச்சுக்கே ஆளாக்க
ஏங்கிவிட்டான் - 'சீச்சீ

கவிதை முலாப்பூச்சு
கற்பனையாம் கானல்;(35)
புவிதனில் பொல்லாங்கே
பூக்கக் குவிப்பதுவாம்'
என்றந்த நற்கவிஞன்
ஏடுகிழித் தோடவிட்டு
வென்றுவிட்ட காளையென
வீறிநின்றான் - 'நன்றறியாக்

கோழையே; செல்'என்று
கொக்கரித்த, தூளான
தாளெல்லாங் காற்றில்
தவழ்ந்து.(40)

471
[பஃறொடை வெண்பா]

252