பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

61. திருவாளர் தெருவாழ்வு.

தெருப்படியில் நின்றபடி பார்த்தே

திருவாளர் புறப்பட்டார் வெளியே; விருப்பமுடன் திருமதியார் வந்தே

விரைந்தெங்கே செல்கின்றீர்?' என்றார்; புறப்படுங்கால் எங்கென்றாய் நாயே!

புகுந்தனையே பொல்லாங்காய்ப் பேயே!

உருப்படுமா எடுத்தசெயல்' என்றே

உதிர்த்திட்டார் கடுஞ்சொற்கள், 9ಣ್

புறப்படுங்கால் எங்கென்றே வினவின்

பொல்லாங்கே நேருமெனும் பொல்லாச்

சிறைப்படுக்குஞ் சகுனத்தைப் பார்க்கும்

சிறுசெயலால் மனம் வற்றிப் போனார்; முறைப்படுத்திச் செயலாற்றுந் திறனில்

முழுத்திறனும் பெற்றிருந்தும், இந்தத்

குறைப்படுக்கும் பழக்கத்தால் அன்பைக்

குலைத்தில்லம் குமைந்திடவும் செய்வார். 3

47

263