பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

முக்காடினாலும் உள்ளத்தில் உவப்புச் சேர்க்கும் காதலில்

தான் எத்தனை மகிழ்ச்சி!

'உன்னைத் தழுவிடிலோ"-எனப் பாரதி பாடிவிட்டு

மயங்குகிறானல்லவர் இதோ கவிஞர் இளஞ்சேரனும்,

“அவள் முயக்கம் உவமையற்று மயக்கும்' என் கிறார். கவிஞர் கொஞ்சம் அளவுக்கதிகமாகவே மயங்கி விட்டார். அந்த மயக்கத்தில் - கிறுக்கில் உளறு மொழி பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

தலைவி தோழியிடம் கூறுகிறாள்: "சிற்றிடையில் ஆடைதனில் கச்சில் போட்ட சுருக்கவிழ்க்க அத்தானைச் சூழ்ந்து சென்று வெற்றிடையில் விளையாடி மகிழ்ந்தாள் என்று விளம்பியவள் துயர்தீர்க்க விரைந்து போடி (63)

உவமை, உருவகம்

பொதுவாக எந்தக் கவிஞரும் புதுப்புது உவமை களாலும் உருவகங்களாலும் தங்கள் சிறப்பை வெளிப் படுத்துவதுண்டு. கவிஞரும் அவ்வகையில் சிறப்பு உவமை களைக் கையாளுகிறார். -

பெண்களின் கூந்தலுக்கு எவற்றையெல்லாமோ உவமை சொல்லிவிட்டோம்; நெற்றிக்கும் அப்படித்தான். ஆனால், நம் கவிஞர் புதுமை படைக்கிறார்:

'உருவார்ந்த பனம்பழம்உன் கூந்தற்கட்டாம்;

உள்வளைந்த பூவன் அன்றோ உன்றன்நெற்றி"

246 - என்கிறார். (246)

1281