பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

'தன்விரலைத் தான் இயக்கத் தெரியா மூடன் தோய் இன்ப யாழ்இயக்க வல்லான் கொல்லோ'

(124) இது போன்ற பல உவமைகளைக் காண முடிகிறது. உருவகமாக எழுதுவதிலும் கவிஞர் பின்னடையவில்லை.

"திருக்குறளின் அறத்துப்பால் நெற்றி: திகழ்கின்ற பொருட்பாலோர் மூக்காம்; உருக்குகின்ற காமப்பால் விழிகள்'-என்று (11)

அடுக்குவதிலிருந்து,

"வெள்ளைத்தாள் புதுப்பானை, விழைவே

  • ..., வெண்ணெய்; விளைகருத்தே கற்கண்டாம்; அணிகள் பாகாம்; . எண்ணியநல் எழுத்தரிசி, சொல்லே சோறாம்'

- (357)

-என்று கவிதைப் பொங்கல் படைப்பது வரை உருவக மயந்தான். வாழிய கவிஞர்தம் திறம்!

சில கதைகளை விரிவாக்கினால் அவை குறுங்காப்பிய மாகவே விளங்கும். கவிஞர் கவனம் செலுத்தினால் பல காப்பியங்களை உருவாக்கலாம். தமிழுக்கு அத்தகைய

வரவு வாய்க்கட்டும். - -

சொல் ஆய்வும் ஆட்சியும்

கவிஞர்தம் உரைநடை நூல்களிலும் தம் சொல் ஆராய்ச்சித்திறனை வெளிப்படுத்தியுள்ளார். கவிதையிலும் அததகைய சொலலாராய்ச்சியில் ஈடுபடத் தவறவில்லை.

[29]