பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை, இளஞ்சேரன்

நல்லார் நாவினில் நனைத்திடில் துப்புவர்; வல்லார் பலரிடம் வணங்கும் வேலையோர்:

கல்லார் கூட்டம் கற்றாரை ஒதுக்கலாய்ப்

புல்லா தென்னையே நிறுத்தினர் புறத்தே.

5||7

தனித்து நின்றதால் தக்கஒய் வெடுத்தேன்; இனித்தடை இல்லையென் றிரும்பெருங் கருநிற நனித்துவர்க் கடலும் நன்றெனச் சேர்த்தது:

குனித்துத் திரையுடன் குலவினன் கலந்தனே.

. 518

ஆண்பால் இல்லையே யாருமிங் கென்றேன்

மாண்பாங் காதலும் மகிழ்ச்சியுந் தருபவன் காண்பாய், வருவான் காலைகொண்” டெ ன்றனர்;

வீண்போக வில்லைவந் தனன்.கதி ரவனே.

519

காட்டினான் பொன்னுடல்; ஊட்டினான் காதலை; தீட்டிய அழகில் தெவிட்டான்; ஆயினும்,

நாட்டிடுந் தொழிலோ காட்டொளிர் தீயாம்;

ஆட்டமும் அழகுநஞ் சார்ந்தபாம் பிடத்தே!

. 520

282