பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்க்லி, புணரி, பரவை, வாரி, வேலை, ஆழி, முந்நீர், நரலை, உவரி' - எனும் சொற்கள் கடலைக் குறிக் கும் சிறப்பினை ஒவ்வொரு வரியில் (883) விளக்கி விடுகிறார். இது போன்ற இடங்கள் வரும் போது கவிதைத் தன்மை குறைந்து வருவதும் உண்டு. ஆனால், தம் ஆற்றலால் அந்தக் குறை தோன்றாமல் ஒளிவிடு கிறார். "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' என்பதனை மனத்திற் கொண்டு மிகத் தெளிவாக விளக்கி விடுகிறார். -

எந்த ஒரு கவிஞனும் அவனது சொல்லாட்சித்திறத் grrá (Poetie Dictions) fı6fİğğl öföLIrrair.

"முல்லைக்கு மணமேற்றும் உடலர்;

முத்துக்கே ஒளியேற்றும் முறுவர்;

சொல்லுக்குச் சுவையேற்றும் குரலர்' (10)

முறுவல் - முறுவலிப்பு - முறுவலர் என்பவையெல்லாம் உள்ளடங்குமாறு முறுவர் எனும் சொல் அமைந்து விடுகின்றது. . -

நயம்

நயம் தோய்ந்து நிற்கும் கவிதைகளை வாரி வழங்கி யுள்ளார் கவிஞர். இரவு நேரத்தில் ஏற்படும் அச்சப் பகுதிகளை அடுக்கிக் காட்டினாலும் இரவும் இனிக்கும் சிலபேர்க்கு என்கிறார்: -

“சரிக்கட்டி வாராத கூலி வாங்கச்

சழக்கர்க்குப் பகலில் எல்லாம் -

தறிக்கட்டை போல்உழைத்தார்". (28)

தலைசாய்க்க

[30]