பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

67. தமிழன்னைக்குத்

தோழி

தமிழன்னைக் குத்தோழி; தமிழினத்துச் செவிலித்தாய்; தமிழ்ம்களிர் தலைமகளாம்; தமிழரசிற் கொருதுாதி: தமிழ்மிடுக்கிற் பேரரசி; தமிழ்நெறியின் ஆசிரியை,

தமிழ்ப்பாட்டிற் கொருபாட்டி, தமிழவ்வைப் பெயரினளே. 553

கருநெல்லிக் கணிபெற்றும், கழன்றவேல் சிறப்பித்தும், அருநல்லோர் வழியேதான் நிலம் நல்ல தெனக்குறித்தும், பெறும் பரிசில் வாழ்வெனிலும் பிறழாத வாழ்வேற்றாள்,

உறும்பெரிய மதர்ப்புள்ள உயர்சங்கத் தவ்வைத்தாய்.

55 s

கோலோச்ச அமைச்சனெனக் கொள்வதுயாம் எவரை'என 'நூலெனிலோ கோல்சாயும்' எனப்பாடிப் பூனூலார் தோலுரித்துக் காட்டியவள் தோலாத நாவெனுஞ்செங்

கோலுடையாள் அடுத்துத்தோன் றிய அவ்வைக்

- கொள்கையளே, 555

293