பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

பிஞ்சுள்ளம் வளம்பெறவும், பேருள்ளம் உரம்பெறவும், நஞ்சுள்ளம் சீர்பெறவும், நடுவுள்ளம் பெருகிடவும் செஞ்சொல்லால் நல்'ஆத்தி சூடி"யொடு நன்னெறிசேர் கொஞ்சுதமிழ் நூல்கள்மூன் றாம்அவ்வை கொடைத்திறனே. 556 'தமிழ்நாட்டை இழந்தாலும் தமிழவ்வை நூல்களெனும் அமிழ்தையாம் இழந்திடுதற் கொருக்காலும் ஒருப்படோ' - மென் றெமதருமைக் பாரதிதான் எழுதியசீர் மெய்யன்றோ? தமிழகத்திற் கொருபுதையல், தமிழவ்வைப் படைப்புகளே. 557 கொற்றவனைப் பாடியவாய் குறத்திக்கும் பாட்டிசைத்துச் சொற்றமிழைப் பொதுவுடைமைச் சீராக்கி, நற்றகுதி அற்றவரைத் தானொதுக்கி, அரவணைப்பார்

தமை வாழ்த்திக் கற்றவர்க்குக் கற்றவளாய்க் களித்தாள்ளம் அவ்வைத்தாய். - 558 அன்னைக்கும் அப்பனுக்கும் அண்ணனுக்கும் அக்கைக்கும் பின்னையொரு அத்தைக்கும் பிறங்குமுதல் எழுத்தோ'அ' முன்னைத்தம் அவ்வைக்கே ஒள'என்றே கொள்வாரோ? 'அன்னை என்ற பொருளன்றோ? அவ்வை'என்றே

வழங்கிடுவோம். 559

294