பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கவிதைகள்


68. பொதுமை திகழும்
புதுமை நிகழும்.




தமிழிற் கவிஞர் தகவிற் பெரியர்;
தருநற் சுவையில் தமிழே யனையர்;
தமிழப் புலவர் தம்மிற் சிலம்பீன்
தவமார் இளங்கோ தகவே பகைர்வேன்:560

வளமை, எளிமை, இனிமைச் சொல்லால்
வற்றா ஊற்றாம், வடித்த சுவையாம்
இளமை எழிலாம், முதுமை அறிவாம்,
இளமென் கதிராம் இளங்கோ கவியே!561

இயலே வனைவாய், இசையே ஒலியாய்,
இனிமைக் கூத்தே இடையார் பரலாய்,
கயலே யனைகண் ணகியார் பொருளாய்க்
கவினார் புலவன் கவிதேர் சிலம்பே.562


295