பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் -

வாய்ப்பான இரவு -

'குறிகாட்டி அறைக்குள்ளே அவள் அழைக்கும்”(30) இரவு - என்று அக இனிப்பு, புற இனிப்பு ஆகிய இரண்டையும் காட்டுகின்றார்.

தென்றலொடு பேசிக்கொண்டிருக்கிறார் கவிஞர். பல் வேறு வேலைகள் இருப்பதாகச் சொல்லி விடை பெறப் போகும் தென்றல்,

கோழிகூவ எழுந்துபோய் நாளெல்லாம் உழைத்து விட்டு இரவில் குடிசைவந்து கூழ்குடித்துத் தலைசாயப் போகும் பாட்டாளியைப் பார்க்கப் போவதாகத்தென்றல் கூறியதுமே கவிஞர், .

“நடைவேண்டாம், நேரம் போகும்;

வாழியஎன் தென்றலன்பே, ஒட்டமாய்ப்போ'

- 145 வான்வழியே பறந்தே போ” *

- என்று விரட்டுவது எவ்வளவு நயமாக உள்ளது!

பள்ளி நாற்பது எனும் பகுதி ஒவ்வொரு மாண வனுக்கும் தனித்தனியே அச்சிட்டு வழங்கப்படவேண் டியது. மாணவர்களோடு அன்றாடம் பழகி வருபவன் எனும் முறையில் அவர்களில் சிலர் குளிக்காமலும் தலையில் எண்ணெய் தடவாமலும், தலைசீவாமலும், அப்படியே சீவினாலும் அதையும் கலைத்து விட்டுக் கொண்டும் வருகின்ற காட்சியைக் காண்கின்றேன்

கவிஞர்கோ இதைக் கூர்ந்து கவனித்துள்ளார்.

[3]]