பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை, இளஞ்சேரன்

69. பொன்றாப் புகழில்

புதுக்கிய கொற்றன்.

தஞ்சைப் பெண்ணே! தஞ்சைப் பெண்னே!

நன்செய் அணிகொள் தஞ்சைப் பெண்னே! நின்தாய்ச் சோழ நீள்நா டதனைப் பொன்றாப் புகழில் புதுக்கிய கொற்றன் ஒருவனோ? அல்லன் பல்லுருத் திறலினன்: (5)

அருஞ்சோழ நாடதைப் பெருஞ்சோழ நாடென அடற்போர் வலியால் ஆக்கியும் ஊக்கியும்,

கடற்படை கண்டு கடாரம் கொண்டும்,

சிங்களப் பிடரியைச் சிதைத்த சிறுத்தைத் தன்கொடி உயர்த்திய தறுகண் மறவன்; (10) பெருநிலம் அளந்தகோல் பிடித்த கோலன்; நாடு பகுத்து வகுத்த கணக்கன்; குடத்தின் ஒலைதேர் குடிமக்க ளாட்சி நடத்தி நிறுத்திய மக்கள் தலைவன்;

300