பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

இருப்பினும் உயிராய் இழையும் உணர்வை உணர்வார், காண்பார் உணர்வின் ஊற்றை.

ஊற்றுக் கண்கள் ஒன்றா, நூறா? மாற்றறி யாத மதர்ப்பூற் றாயிரம். "விரைவில் தமிழ்ஒளி உலகம் முழுதிலும்

பரவா விடில்என் பெயரை மாற்றி அழை' என எழுதினாய்; அடடா இவ்வுரை ஆர்வத் துடிப்பின் ஆணிவேர்; உண்மைப் பார்வை; எதிர்வரும் படிப்பிடிப் பன்றோ? உரைத்தநீ குறட்டை உறக்கமோ கொண்டாய்? வரைத்தாழ் அருவியாய், வற்றா ஊற்றாய்

எழுதிப் பாடி, எழுச்சியின் ஏறாய்ப்

பழுதிலாப் படைப்பால் பைந்தமிழ் வளர்த்தாய். 'எதிலும் தமிழ்"என ஏற்றங் காட்டினாய்; 'கலப்பிலாத் தமிழில் கல்விவேண் டும்'எனப்

'பலகை, குச்சிஎனப் பகரல் வேண்டும்;

சிலேட்டு, பென்சில் சொல்லக் கூடாது;

பேசும் போது தமிழே பேசுக! வீசும் வழக்குரை, வேண்டும் எழுத்திலும்

305

(I5)

(20)

(2 5)

(30)