பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

தமிழே; தமிழே; தமிழே' என்று நீ 'அமிழ்தத் தமிழை அருந்துவீர்” என்றாய். இன்றுயான் காணும் இன்றமிழ் உணர்வை அன்றே காட்டிய அரும்விடி வெள்ளி நீ; (35) உன்னரும் எழுத்து பொன்னெழுத் தாகப் புதிய சுவைகள் புதுக்கிக் காட்டினாய். குவிந்த தமிழைக் குப்'பென மலர்த்தினாய். 'பாட்டுத் திறத்தால் பார்ஆள் வேன்'எனத் தீட்டிய பாக்கள் தினவுத் தென்றல். (40) கவிதைத் தொழிலில் கடைந்த சிலைநீ. செவிக்குச் செந்தமிழ்ச் செந்தேன் ஒடை; சொல்லாற் றற்குச் சுனையின் ஊற்று; பொல்லாங் கர்க்குப் போர்ப்புயற் காற்று. இவைகண் டன்றோ இனியஉன் தாசன் (45) "தமிழகம் தமிழுக்குத் தகும் உயர் வளிக்கும் தலைவனை எண்ணித் தவங்கி டக்கையில் இலகு பாரதிப் புலவன் தோன்றினான்' என்றே பதித்தார் எழிற்கல் வெட்டே, நின்ற சொற்கள்: நூற்றள வுண்மை;நீ (5.0)

306