பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை & இளஞ்சேரன்

"ஞான ரதம்'ஒரு வானம் பாடி, "தராசு நேர்மை பராவும் பதாகை; 'சந்திரி கா’ஒரு இந்திரத் திருவில் கதைகள் எல்லாம் புதையல் குழிகள்;

எழுதுகோல் என்ன மின்னேற்று நாளமோ? (I 10)

எழுத்தெலாம் மின்னலால் சுழித்த சுழிகளோ?

முண்டாசுக் கவிஞ,உன் முழுத்திரு உருவம் கொண்டேன் என்மனத் திரைஓ வியமாய்.

முண்டா சாஅது? மூளையாம் குமரற்கு

வெளுத்துக் கட்டிய வேட்டிக் கட்டு; (115)

விந்தை அறிவால் விரிந்த நெற்றியோ நந்தமிழ் உலவ நடைபா வாடை, 'கண்ணேறு கழிக்க கருதிய 6T6,136. Tir

கன்னங் கரிதாய்க் காட்டினன் பொட்டே. மொத்தமாய் வளர்ந்த முரிப் புருவங்கள் - (120) வித்தக விழிகட்கு விரித்த குடைகள் மூக்குதான் தமிழின் போக்கு வரத்து; நாக்கோ கவிதைக்கு நாட்டியம் பயிற்றும்;

310