பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

தனித்தமிழின் நறுஞ்சுனையே!

தமிழ்ப்பொருளின் கனிச்சுளையே தமிழ்நூல் வெள்ள

இனித்தமழைக் கருமுகிலே!

பிறமொழிச்சொற் கலப்பதனை இடித்துக் கேட்க இனித்தமிழில் ஆளில்லை

என நினைந்தே இறுமாந்தோர் இரும்புள் ளத்தைத் துணித்தெழுந்த மறைமலையே!

துகளற்ற நும் ஆண்மைத் துணிவென் என்பேன்.

598

மலருக்கு மலர்ச்சியதன்

மதர்ப்பாண்மை, மண்ணுக்கு விளைவே ஆண்மை; வலருக்குத் தாளாண்மை!

வனப்பினர்க்கு நாணமநே வயங்கும் ஆண்மை;

சிலருக்குச் சினந்திடுதல்

சிற்றாண்மை; சீரியர்க்கோ பணிவே ஆண்மை; பலருக்கு நடிப்பாண்மை;

பயனார்ந்த மலையுமக்கோ படிப்பே ஆண்மை.

599

319