பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

75. பண்பாட்டின் விரிவுரை.

தமிழ்ப்புலமை, சிவப்பற்று, தக்கசம யப்பொதுமை,

இமிழ்தென்றற் சொற்பொழிவு, எழுத்தாற்றல், தொழில் தலைமை கமழ்பழக்கப் பண்பாடு, கவின் அமைதி. உலகியற்சீர்

அமிழ்தமெனும் இவையொட்டு மொத்தவுரு திரு. வி. க. - 602

நாட்டுநலம் தமிழ்நலத்தால்; வீட்டுநலம் தமிழ்மரபால் ஏட்டுநலம் தமிழ் எழுத்தால், கூட்டுநலம் தமிழ் இனத்தால்: பாட்டுநலம் தமிழிசையால்; ஆட்சிநலம் தமிழினுக்கே

மீட்டு,நலம் காணுவதே ஊட்டமென்றார் திரு. வி. க.

. 603

பெரியார்க்கு நல்லன்பர்; பெரிய புரா ணப்புலவர்; உரியார்தே சியத்திற்கே, உடன்இந்தி எதிர்ப்பாளர்;

321