பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

புரியாத புதிரல்லர்; புகழ்கட்சிக் கொள்கைகளில்

உரியவற்றில் ஒத்ததுகொண் டுயிர்வாழ்ந்தார் திரு. வி. க. 604

தேர்தலிலே பொதுவுடைமைத் தோழரொடு சிவமதத்தார் நேர்நின்றால் தங்கள்துணை யார்பெறுவார்’ எனக்கேட்கத் தேர்தலிலே சிவமதத்தார்க் கேதுசெயல்? பொதுவுடைமை யார்வெற்றி எம்வெற்றி எனுஞ்சைவர் திரு. வி. க. 605

எவருக்கும் உதவிடுவார்; எவரிடமும் உதவிபெறார்; ‘இவர் காணப் பெற்றேன்?என் றெவரும்மகிழ் தன்மை யொடு தவறுதமை அணுகாமல், தவறுடையார் தமைப்பொறுக்கும் விவரமுடைப் பண் பதனின் விரிவுரைதான் திரு. வி. க. 606

உறைதமிழப் பாட்டெழுதி, உரையெழுதித் தொழிலாளர் குறையெழுதிக் குமுகாய முறையெழுதி, ஆன்மீகத் துறையெழுதி, வாழ்வியலின் பொறையெழுதி, எவ்வழியும்

கதையெழுதாத் திருக்கையால் நிறையெழுதும் திரு. வி. க. - 607

322