பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

77. ஓர் இலக்கியப் படிவம்.

‘அண்ணா என்பதோர் அருஞ்சுவைச் சொல்லாம்; ‘அண்ணம்' என்பது மேல்வாய் ஆகும்; அருஞ்சுவை என்பதோ அதற்கொரு பொருளாம்; அண்ணத் துடனே நாவது பொருந்தினால் ‘அண்ணா' பிறப்பார், அஃதொரு சுவைச்சொல்! (5)

‘அண்ணா” என்றே எந்நாச் சொலினும் அந்நா அமுதச் செந்நா ஆகும். சுவைச்சொல் ஒன்றோ? சுரக்கும் ஒளியால் அவர்தம் தோற்றம் அண்டினோர்ப் பிணிக்கும் கவர்ச்சி இலக்கியம்; காண்பாம் அதனை: (10)

நெற்றியோ அறிவு நடம்பயில் தெற்றி, ஒற்றிய புருவம் ஒருபொருள் கருவாம்; கண்ணொரு கலித்தொகை; கானல் வரிஇமை;

327