பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

பார்வையே ஆயிரம் பருப்பொருள் பேசும்; ஆர்வப் பார்வை "அருந்தம்பி என்னும்: - ( 15) அரும்புப் பார்வை அரசியல் முத்திரை; குறும்புப் பார்வையில் குற்றாலம் புரியும்: அகலப் பார்வையில் பகையும் நகையாம்; பகுத்தறி வொளியாம் பரவிடும் பார்வை;

ஒரப் பார்வை ஒருகோடி பொன்பெறும்; (20) ஈரப் பார்வைக் கில்லை உவமை; கண்ணில் கவர்ச்சிக் கல்லை வைத்து

மண்ணில் ஈன்றனர், மதிப்புடை அன்னையார், பார்வையைத் திருப்பிப் பக்கம் பார்ப்பம்: கன்னமோர் அகப்பொருள்; கனைப்பொரு புறப்பொே மூக்கொரு முல்லைப் பாட்டாம்; அதனில் தேக்கிய பொடியோ மகரந் தத்துள்; தேனும் உண்டாம், யாமது ಹ6T.೧ುಹಿ; வாயோர் பாயிரம்; இதழ்நூல் ஆயிரம்;

புகையிலை உண்டாம்; புகவிலை புன்சொல்; (30)

பகையிலை நாவில்; “பாகிலை உண்டாம்.

  • பாகு இலை - பாக்கு, வெற்றிலை

328