பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

-என்று சுட்டிப்பாடும் கருத்து மிக அருமையாக அமைந் துள்ளது. -

சில கவிதைகளை நாடகப் டாங்கிலேயே அமைத் துள்ளார். அதனாலேயே உரையாடல் முறையில்யாப்பை அமைத்துக்கொள்கிறார். * .

தங்கட்குரிய புலமைச் செல்வத்தை வைத்துக்கொண்டு வெட்டி வேலை பார்க்கும் புலவர்கட்கு அறிவுரை சொல்வது அழகாக உள்ளது: :

ாஇதற்கிது பொருளென அன்றென இடைமறுப் பெழுதியே நாளெலாம் பதர்க்கென உழுவதை விட்டுநீர் பயனுடைச் செயல்களே ஆற்றுவீர்” (374)

-என்கிறார்.

தனித்தமிழ்

கவிஞர்கள் தாம் பல சொற்களைப் புதுவதாகப் புனைந்து உலகிற் களிப்பவர்கள். கவிஞர் இளஞ்சேரன் தனித்தமிழ் உணர்வுடையவர்; தனித்தமிழ்த் தந்தைக் குப் படிமம் நிறுவியவர். எனவே, அஞ்சல் ஊழியர், நாட்காட்டி முதலிய சொற்கள் கவிதைக்குள் பொருத்த பாக வந்து விழுகின்றன.

தனித்தமிழில் ஈடுபாடுகொண்ட 'கவிஞர்கோ தம் கவிதைகளை நல்ல தமிழில் தந்திருப்பது பெருமைக் குரியது. கலப்படமே இல்லாத தனித்தமிழில் பெருஞ் சித்திரனார், ம. இலெ. தங்கப்பா போன்றவர்கள் சிறப் பான படைப்புகளைத் தந்துள்ளனர். அந்த வகையில் 'கவிஞர்கோ இளஞ்சேரனும் சிறந்து நிற்கிறார்.

134.