பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

நள்ளிரவில் நினைவிழந்த நேரம் பார்த்து நமனே, நீ தாக்கினையோ? 'சிச்சீ' பேடி. கொல்லவந்த முழுநிலவே, குளிர்வாய் உண்மை; குளிர வைத்தே சென்றாயோ? குளிர்ந்தே போவாய். கொள்ளியெனத் திங்களன்று காலை வந்த எழுங்கதிரே வென்றகுறிக் கிது.கைம் மாறோ? தெள்ளுதமிழ் நாடென்று பெயர்தந் தாரே

தென்னிலமே, வயிற்றடக்கி நன்றி கொன்றாய.

6/9

மேடையிலே சிறந்திட்டார் அறிஞர் பல்லோர்; மேடைதனைச் சிறக்கவைத்தார் அறிஞர் அண்ணா: ஏடதிலே எழுதிஉயர் வுற்றார் பல்லோர்; ஏடதற்கும் எழுச்சிதந்த எழுத்து மன்னர்; நாடதனில் நாட்டமுற்றார் நல்லோர் பல்லேர், நாடியதில் நாட்டைவைத்த நல்லோர் கோவாம்; கோடையிலே கொண்டலெனக் கொற்றங் கொண்டார்:

கொடுவாடை தனில்நிறுத்திப் போக லாமோ?

620

332