பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

உளம்நிறைந்த உமை நினைந்து வெதும்பும் நெஞ்சை உம் புகழில் தோயவைத்து வணங்கி நின்றே, நலம் நிறைந்த தும்பண்பில் நடந்து செல்வோம்; நலித்தவர்க்கும். நகைப்பவர்க்கும் நலங்கள் செய்வோம் களம்எதிலும் வெறுப்பு,சினம், கடுமை கொள்ளோம்; . கணிதமிழ்க்கும் நாட்டிற்கும் கவின்கள் செய்வோம்: உளமென்னும் மலர்கொண்டும் புகழாம் தாளில்

உயிப்படைப்பாய்ப் படைக்கின்றோம், உயிரே, அண்ணா!

623

படிப்பதற்கே பாட்டெழுதிப் படைத்த யானே, பதைப்பதற்கும் பாட்டெழுதும். மனம்பெற் றேனே. படிப்பதற்கே பிறப்பெடுத்த அண்ணா! அண்ணா! பயனார்ந்த சுவையளித்த நீரே, என்னைத் துடிப்பதற்கே ஆளாக்கும் உளம்ஏன் கொண்டீர்? துகளில்லா உமையெண்ணிக் துடிக்கும் பாட்டை முடிப்பதற்கே முடியாமல் 54..ಹಿಹೆr றேன்யான்; முடியாமல் முடிந்த அண்ணா, முடிப்பேன் பின்னே.

624 (எண்சீர் ஆசிரிய

விருத்தங்கள்)

334