பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

வம்பை ஏற்றுத் தும்பை சூடிய

ஏற்றின் அருமைத் தோற்றம் காண்பாம்: (32) 625 [நிலைமண்டில ஆசிரியப்பா)

தும்பை, தூய்மைக் கிண்ணம்; இலக்கணத் தும்பை, போர்க்குறிச் சின்னம், அவர்தலை தும்பைக் காட்டில் துடைத்து வைத்த அம்பொன் கேடயம்; அவருளம் வெள்ளை;

முகப்பட் டயமாய்த் தகக்கும் நெற்றியோ, (5)

பகுத்தறி வடுக்கிய படைக்கலக் கொட்டில்.

நெற்றியில் நீடிய கொற்றக் கோடுகள் இனவுணர் வதனின் தினவைத் தீட்டிச்

சாணை பிடித்த ஆணைப் பட்டயம்.

நெறித்த புருவம் நிமிர்ந்த அரிமா (10 J முறித்த சோம்பல் முதுகின் வளைவாம்.

விழிகள் உணர்வுச் சுழிகள்; விதித்த பார்வை, சாதிப் பதர்க்குத் தீர்வை.

மூக்கு தன்மானத் தீக்குழம் பதனில்

337