பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

கைகள்; விரலோ எழுத்துத் திறவுகோல்

நெஞ்சுரம் என்னும் வைரச் சுரங்கத் தஞ்சாக் கோட்டையே அவர்மார் பகமாம்.

கால்கள் தன்மானக் கால்கோள் ஆகும். (35)

இவர்யார் என்றே அறியார்; குட்டிச் சுவர்தான் என்பேன்; சுளுக்கிய மனத்தோர் இவரோ பெரியார்? என்றனர்; இன்றோ

இவரே அன்றி எவரே என்பர்:

சாதி ஒழிப்பவர் மூச்சு; பொய்ம்மைக் (40)

கோது தீர்ப்பதே பெச்சு. இவர்சொல்

புயலைப் புதுக்கிய புதுமைத் தென்றல்

வினாக்குறி அவரது வியத்தகு போர்ப்படை,

வஞ்சமில் பேச்சின் வெளிப்படை ஒருபடை,

அஞ்சாப் பகுத்தறி வடிப்படை மறுபடை. (45) தொடுக்கும் படையெடுப் பதனிலும் வெற்றி முடிவைப் பற்றிய நெடி அவர்க் கில்லை;

'மலையைத் தாடி முடியால் இழுப்பேன்;

339