பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

கள் மறுப் பதனின் கொள்கைக் குறியாய்; ஊரார் மரத்தை அன்று கிழித்தார், குடலையோ தேயப் படமதைக் கிழித்தே தமிழ்நாடு தமிழருக் கென்றார்; எரித்தார், ஆளையோ? சட்டத் தாளையே; உடைத்தார்,

மண்டையை அன்று, களிமண் உண்டையை.

பிறர்பொருள் அன்றித் தம்பொருள் அழித்தும், பிறர்க்கிடை யூறு தரக்கூடா தென்றும் - மூட்டிய அறப்போர் ஈட்டிய வெற்றிதான்: படிப்போர், படித்து முடிப்போர், 45ಣಿಹ

பிடிப்போர், வாட்டும் மிடிப்போர் குறைந்து களிப்போர், சமமாய்க் குளிப்போர், வாழ்வில்

கொழிப்போர் பெருகி, விழிப்போர் அருகிப் பழிப்போர் பதுங்கி, நெளிப்போர் ஒதுங்க

அறப்போர் விளைத்தார், திறப்போர்ப் பெரியார்;

அவர்போர்ப் பெருமை வைரச்

சுவர்போல் நம்மைச் சூழ்ந்து காப்பதே.

(70)

(75)

(80}

(82)

(நேரிசை ஆசிரியப்பா)

34/

626