பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை, இளஞ்சேரன்

மூடத்தை முறியடிக்க மூரியெழுந் தார்த்திட்ட

முதல்அரிமா; மூத்த சாதி

வேடத்தைக் கிழித்தெறிய வேர்த்தெழுந்த வெறிவேங்கை;

வேண்டுபகுத் தறிவாம் மூல -

பாடத்தைப் படிப்பித்த பகலவனாம் பரிவாசான்;

பைந்தமிழர் தன்மா னச்சீர் மாடத்தில் குடியேற மனப்படியை எழுப்பிவைத்த

மறமன்னர், அறப்போர் வீரர்.

போராட்டம் ೨೧tar: தேரோட்டம், புடம்போட்டுப் பொருத்திவைத்த கொள்கை தன்னில் -

மாறாட்டம் கொள்ளாது மார்தட்டி மடிகட்டும்

மறவேந்தன்; அறப்போர் என்றால்

நீரோட்டம் வழுவாத நிறையோட்டப் போராட்டம்

நிகழவைத்த பெரியார் வாழ்ந்த

ஈரோட்டில் நின்றிட்டால் எழுங்குருதி ஓட்டத்தில்

மின்னோட்டம் ஓடக் காண்போம்.

328

342