பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

சைவத்தார் வைணவத்தார் சமணத்தார் பலமதத்தார்.

சாரமிலாக் கதைகள் கட்டிப் பொய்வைத்தார் எனக்கண்டு பொறிவைத்தே

குறிவைத்தார் நெறிவைத்த அறப்போர் வீரர்.

தெய்வத்தார் நாங்களெனத் தீந்தமிழர் மரபெல்லாம்

திட்டமிட்டே திரித்தார் பொய்யில் கைவைத்தே நம்பெரியார் களைந்தெறிந்து கைகொட்டி

மெய்வைத்த அறப்போர் வீரர்.

629

தமிழகத்துத் தலைமகனைத் தன்மானக் கதிரவனைத்

தமிழகத்தின் தந்தைப் பேற்றை,

உமிழகத்தில் வீழ்ந்திருந்த ஊமையரை உரும் ஏறாய்

ஊக்கிவிட்ட உணர்வின் ஏற்றைத் -

தமிழகத்தில் சாதிப்பேய் தலைதெறிக்கத் தகர்த்திட்ட

தறுகணரைத் தமிழர் வாழ்வைக்

கமழகத்தில் கொண்டுவைத்த கனிவு ஐயா ಹನಿ--ನಿಹಿ

கட்டளைக்கல்; அறப்போர் எல்லை. 630

343