பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

விரட்டக் கவிதைப் புரட்சி மூட்டுவேன்; என்றன் தமிழ்க்குத் தென்றல் கூட்டுவேன்;

மாடுவேன் தமிழை; சாடுவேன் பகையை:

காளியைப் பாடினால், கோழிகூ வாது

மீளியாய்ப் பாடுவேன் வாழிய தமிழே:

"ஏடா, தம்பி! எடடா எழுதுகோல்! கூடா திந்தக் கூனலும் கோணலும்; தமிழ்த்தாய் மகிழத் தமிழன் திகழ, உமிழ்நீர் தேனின் ஊற்றாய்ச் சுரக்கப்

பாடுவேன்’ என்றார்; பாடினார்; பாடினார்.

|

"தனிமைச் சுவையுள்ள சொல்லை-எங்கள் தமிழினும் வேறெங்கும் யாம்கண்ட தில்லை' 'தமிழுக்கும் அமுதென்று பேர் - எங்கள் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்' 'மங்கை ஒருத்தி தரும்சுகமும் - எங்கள் . மாத்தமிழ்க் கீடில்லை'

எனத்தமிழ் உயர்வை மனத்தில் ஊன்றினார்.

347

(30)

{3 డి}

(40)

(45.3