பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

கொடியோர்செயல் அறவே! குகைவாழ் ஒரு புலியே உயர் குணமேவிய தமிழா' எனத் தோள்தின வெடுக்க வாள்முனைக் கவிதை வடித்தார்; படித்தோர் துடித்துணர் வேறினர்.

இவர்தம் கவிதை: மின்னல் கீற்றில் பின்னிய சாட்டை, முல்லைக் காட்டில் முகிழ்த்த தென்றல்; மானம் பாடும் வானம் பாடி,

முட்டும் சாதியைக் கொட்டும் குளவி, நெஞ்சம் இனிக்கும் செஞ்சொற் கட்டி; மதச்சாத் திரத்தின் புதைகுழிக் கருவி; சொல்லைத் தேனாய்ச் சுரக்கும் சுரபி, கடவுட் போர்வையைக் குடையும் நெடுவேல்;

பகுத்தறி வதற்குத் தொகுத்தகல் வெட்டு

இவர்தம் எழுத்தோ! எழுத்தெனச் சொல்வதோ? அன்ற ஃ தன்று; பழுத்த தமிழ்க்கடல் பயந்தநன் முத்தாம்;

349

(65)

(70)

(75)

. (80)